டெல்லியில் விவசாயிகள் வைக்கோலைத் எரிக்கும் புகை காற்று மாசுபாட்டில் 36 விழுக்காடு எனத் தகவல்
விவசாயிகள் வைக்கோலைத் தீவைத்து எரிப்பதால் எழும் புகையும் டெல்லியின் காற்று மாசுபாட்டுக்கு முக்கியக் காரணியாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
டெல்லியில் தீபாவளிக்கு மறுநாள் முன்னெப்போதும் இல்லாத வகையில் காற்று மாசு அதிகரித்துத் தீவிரநிலையடைந்தது. வெடிகள் கொளுத்தியதால் மூண்ட புகை, வாகனப் புகை ஆகியவற்றுடன், விவசாயிகள் வைக்கோலைத் தீவைத்துக் கொளுத்துவதும் காற்று மாசுபாட முக்கியக் காரணி எனக் காற்றுத் தரம் மற்றும் வானிலைக் கண்காணிப்பு ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
வைக்கோலைத் தீவைத்து எரிப்பதால் எழும் புகை, காற்று மாசில் 36 விழுக்காடு அளவுக்கு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. சனிக்கிழமை காலை முதல் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் அடுத்த இரு நாட்களில் மாசின் அளவு குறைந்துவிடும் என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
Comments