ஆஸ்திரேலியாவில் சுறா மீன்களால் தாக்கப்பட்ட நபரைத் தேடும் பணிகள் தீவிரம்...

0 2381

ஆஸ்திரேலியாவில் கடலில் நீச்சலடித்த போது இரண்டு சுறா மீன்களால் தாக்கப்பட்ட நபரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பெர்த் நகர் அருகே உள்ள போர்ட் பீச்சில், கடலில் நீச்சலடித்துகொண்டிருந்த நபர் இரண்டு சுறா மீன்களால் தாக்கப்பட்டார். அருகே இருந்த படகில் இருந்து இதனை கவனித்தவர்கள், மற்றவர்களை கரைக்குத் திரும்பும்படி அபாய குரல் எழுப்பினர்.

சுறா மீனால் தாக்கப்பட்ட நபரை படகுகள் மற்றும் ஹெலிகாப்டரில் சென்று போலீசார் தேடி வருகின்றனர். உலகளவில், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் சுறா மீன்கள் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments