மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள்..! கொடூரமான முறையில் சங்கிலியை பறித்ததில் மூதாட்டிக்கு பலத்த காயம்

0 2879

நாகர்கோவிலில் சாலையில் நடந்துசென்ற மூதாட்டியிடம், இருசக்கரவாகனத்தில் வந்த இருவர் 11 சவரன் தங்கசங்கிலியை பறித்துசெல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி எதிரேயுள்ள ப்ளசன்ட்நகரை சேர்ந்த ஆதிதாசனின் மனைவியான சரோஜா, வீட்டின் அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று திரும்புகையில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சரோஜா அணிந்திருந்த 11 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். பின்புறமாக வந்து சங்கிலியை கொடூரமான முறையில் பறித்ததில் கீழே சரிந்த சரோஜாவிற்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நேசமணி நகர் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, அப்பகுதியிலுள்ள சிசிடிவிகளில் ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments