இலவச ரேஷன் திட்டத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க டெல்லி அரசு முடிவு

0 2607

இலவச ரேஷன் திட்டத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் இலவச ரேஷன் தானிய திட்டத்தை இந்த மாதம் 30 ஆம் தேதியுடன் முடித்துக் கொள்வதாக மத்திய உணவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த முடிவை மறுபரிசீலனை செய்து மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் டுவிட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பலர் கொரோனா பாதிப்பால் வேலையிழப்பிற்கு ஆளாகி உள்ளதால், இலவச ரேஷன் திட்டத்தை டெல்லி அரசு தொடர்ந்து மேலும் 6 மாதங்களுக்கு அமல்படுத்தும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments