வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி கூறிய காவல்துறை

0 2663

வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளித்து உத்தரவிட்ட முதலமைச்சர் முக ஸ்டாலினை, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் காவல் துறையினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்கள் குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமைக் காவலர்கள் வரையிலான காவலர் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இதனை செயல்படுத்தும் விதமாக, கடந்த 3 -ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments