கேரள தங்க கடத்தல் வழக்கு: சொப்னா சுரேஷ் ஜாமினில் விடுதலை
கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் இருந்த சொப்னா சுரேஷ் 16 மாதங்களுக்குப் பிறகு இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்ட அவர் மீது உபா பிரிவின் கீழ் தேசிய விசாரணை முகமையான என்ஐஏ வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் சொப்னா சுரேஷ் மீது உபா பிரிவுகளான தீவிரவாதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கை குற்றச்சாட்டுகளை சுமத்த உரிய காரணங்கள் இல்லை என கூறி கேரள உயர் நீதிமன்றம் கடந்த 2 ஆம் தேதி ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
Comments