யாழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 23 பேரையும், செந்தில் தொண்டமான் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

0 1847

எல்லை மீறி மீன் பிடித்த தாக கூறி இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 23 பேரையும், இலங்கை பிரதமரின் இணைச்செயலாளர் செந்தில் தொண்டமான் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தீபாவளியை ஒட்டி அவர்களுக்கு புத்தாடை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய அவர், அநேகமாக வரும் 11 ஆம் தேதி அவர்கள் அனைவரையும் விடுவிக்க நடிவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

நாகபட்டினம் மாவட்டத்தை சேர்ந்த இந்த 23 மீனவர்களும் கடந்த 28ம் தேதி பருத்தித்துறை நீதிமன்றத்தில், zoom மூலம், ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஜாமீன் மறுக்க பட்டதால், விசாரணை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments