திருவிடைமருதூர் அருகே வங்கி ஏடிஎம்-ஐ உடைத்துக் கொள்ளை முயற்சி

0 3141

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கடப்பாரையால் ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

வேப்பத்தூரில் உள்ள பேங் ஆப் பரோடா வங்கியின் ஏடிஎம்-மிற்கு அதிகாலையில் புகுந்த நபர், கடப்பாரையால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளான். அப்போது எச்சரிக்கை அலாரம் அடித்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், தகவலறிந்து வந்த போலீசார்,தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் கைரேகைகளை பதிவு செய்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments