வெனீஸ் நகரில் கொட்டித் தீர்த்த கனமழை... புனித மார்க் சதுக்கத்தை சூழ்ந்த வெள்ளநீர் !

0 2254

இத்தாலி வெனீஸ் நகரில் கொட்டித் தீர்த்த கனமழையால் முக்கிய சுற்றுலாத் தலமான புனித மார்க் சதுக்கத்தை சுற்றி மழைநீர் சூழ்ந்தது.

ஏறத்தாழ 1 மீட்டர் அளவில் கனமழை கொட்டியதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், கூடங்கள் உள்ளிட்டவைகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் கொட்டிக் கிடக்கும் நீரில் நடந்து செல்லும் அவதிக்குள்ளாகினர். 

பருவநிலை மாற்றம் கடல் மட்டம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வெனீஸ் நகரில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் மழைப் பொழிவு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments