ஜெர்மனியில் உள்ள ரஷ்ய தூதரக சாலையில் அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள ரஷ்ய தூதரக சாலையில் அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 19-ஆம் தேதி தூதரகத்தின் மேல் மாடியில் இருந்து அதிகாரி குதித்து இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த அதிகாரி தூதரகத்தில் 2-வது செயலளர் அளவிலான பொறுப்பிலும், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக பிரிவில் உயர் பொறுப்பில் பணியாற்றியதாக ஜெர்மனி போலீசார் தெரிவித்தனர்.
இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்படாத நிலையில் உயிரிழந்த அதிகாரிக்கு பிரேத பரிசோதனையும் மேற்கொள்ள ரஷ்ய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments