காஷ்மீரில் மருத்துவமனை அருகே தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் விரட்டியடிப்பு
காஷ்மீரில் மருத்துவமனை அருகே தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டனர்.
ஸ்ரீநகர், பாரமுல்லா நெடுஞ்சாலையில் உள்ள SKIMS மருத்துவமனை அருகே பதுங்கியிருந்த சில தீவிரவாதிகள் திடீரென பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். தகவலறிந்த பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
இருதரப்புக்கும் இடையே சிறிது நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. ஆனால் இதில் யாருக்கும் காயமேற்படவில்லை என்ற போதும், தீவிரவாதிகள் தப்பியோடி விட்டனர்.
Comments