அபாயகரமான நிலையை எட்டியது தலைநகரின் மாசு குறியீடு
டெல்லியில் காற்றுமாசு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.
தீபாவளி நாளில் தடையை மீறி பட்டாசுகள் அதிகளவில் வெடிக்கப்பட்டதால் எங்கும் புகை மண்டலம் சூழ்ந்தது. தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து மறுநாள் காலை முதல் காற்றின் தரக்குறியீடு தொடர்ந்து மோசம் அடைந்தது.
மாலையில் காற்றின் தரம் 382 ஆக இருந்தது. இரவில் வெப்பம் குறைந்த நிலையில் காற்றின் வேகத்தால் நகரம் முழுவதும் மாசு பரவியது. நேற்று காற்றின் மாசு அதிகரித்துக் காணப்பட்டது. காற்றில் பரவும் நுண்துகள்களால் நுரையீரல், புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்
Comments