கோவை அருகே பா.ஜ.க நிர்வாகி வீட்டில் துப்பாக்கிச்சூடு
கோவையில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி வீட்டில் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுண்டக்காமுத்தூர் விசாலாட்சி நகர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் குனியமுத்தூர் மண்டல் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் நேற்றிரவு 9 மணி அளவில் மனைவி,குழந்தைகளுடன் வீடு திரும்பிய போது வீட்டின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடி உடைந்த நிலையில் காணப்பட்டது.
இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது கண்ணாடியில் துப்பாக்கியால் சுடப்பட்ட அடையாளமும், வீட்டிற்குள் விலங்குகளை சுட பயன்படுத்தும் ஏர் கன்னிலிருந்து சுடப்பட்ட துப்பாக்கி குண்டுகள் சிதறிக் கிடந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்த அங்கு இருந்த 10 துப்பாக்கி குண்டுகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments