டி20 உலக கோப்பை: ஸ்காட்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி

0 7984

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான சூப்பர்-12 சுற்று ஆட்டத்தில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி இந்திய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 17 புள்ளி 4 ஓவர்களில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 6 புள்ளி 3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. ராகுல் 50 ரன்களும், ரோஹித் சர்மா 30 ரன்களும் எடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments