நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்க்கான சுங்கவரி நீக்கம் ; மத்திய அரசு நடவடிக்கை
நாட்டில் சமையல் எண்ணெய்களின் விலையைக் கட்டுப்படுத்த அவற்றுக்கான இறக்குமதி வரியை நீக்கியும், வேளாண் காப்புவரியைக் குறைத்தும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சுத்திகரிக்கப்படாத பாமாயில், சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றுக்கு இருந்த இரண்டரை விழுக்காடு இறக்குமதி வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. 20 விழுக்காடாக இருந்த வேளாண் காப்பு வரியை சுத்திகரிக்கப்படாத பாமாயிலுக்கு ஏழரை விழுக்காடாகவும், சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்க்கு 5 விழுக்காடாகவும் குறைத்துள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சோயாபீன் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி 32 புள்ளி 5 விழுக்காட்டில் இருந்து 17 புள்ளி 5 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சமையல் எண்ணெய்களின் விலை சராசரியாக லிட்டருக்கு 4 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை குறைந்துள்ளது.
Comments