செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியாக உயரும் போது உபரிநீரைத் திறக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் முடிவு
சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியாக உயரும் போது அதிலிருந்து உபரிநீரைத் திறப்பது எனப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர்.
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த ஒருவாரக் காலமாக மழை பெய்ததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் 21 அடியாகவும், நீர் இருப்பு இரண்டாயிரத்துத் தொள்ளாயிரம் மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு நீர்வரத்து நொடிக்கு 335 கன அடியாக இருந்தது. ஏரியில் இருந்து 148 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நவம்பர் மாதத்தில் 22 அடி வரையும், டிசம்பர் மாதத்தில் 23 அடி வரையும் நீரைத் தேக்கி வைக்கப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
Comments