கேதார்நாத்தில் ரூ.130 கோடி மதிப்பிலான 5 வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

0 2913

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் வழிபாடு நடத்தினார்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்ற பிரதமர் மோடியை, மாநில ஆளுநர் குர்மித் சிங், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புனிதலமான கேதார்நாத் சென்றார். இந்தியாவின் பன்னிரண்டு ஜோதிர்லிங்க ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் மோடி வழிபாடு நடத்தினார்.

11 ஆயிரத்து 755 அடி உயரத்தில் மந்தாகினி ஆற்றங்கரையில் உள்ள கர்வால் இமய மலையின் எல்லையில் இக்கோயில் அமைந்துள்ளது.இதனைத் தொடர்ந்து 8வது நூற்றாண்டை சேர்ந்த ஆதிசங்கராச்சாரியாரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் மற்றும் 12 அடி உயரமுள்ள அவரது சிலையையும் பிரதமர் திறந்து வைத்தார்.

அங்கும் பிரதமர் மோடி வழிபட்டார். 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெருவெள்ளத்தில், ஆதிசங்கராச்சாரியார் நினைவிடம் சேதமடைந்ததை அடுத்து தற்போது புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. 130 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments