"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
அகதிகள் வருகையை தடுக்க 500 கி.மீ. தூரத்திற்கு வேலி அமைக்கும் லிதுவேனியா அரசு
அகதிகள் வருகையை தடுக்க பெலாரஸ் நாட்டுடனான எல்லையை எஃகு வேலி போட்டு லிதுவேனியா அரசு மூடி வருகிறது.
மத்திய மற்றும் கிழக்கு நாடுகளை சேர்ந்த அகதிகள் பெலாரஸ் வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தஞ்சமடைவதாக கூறப்படுகிறது. ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் பெலாரஸ் வழியாக லிதுவேனியாவில் குடியேறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து 175 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு எஃகு வேலி போடும் பணியில் லிதுவேனியா ஈடுபட்டு வருகிறது. அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் பணிகளை முடிக்கவும், எல்லையில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தவும் லிதுவேனியா அரசு திட்டமிட்டுள்ளது.
Comments