மகாராஷ்டிராவில் போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கக் கோரி வேலைநிறுத்தம்... நீதிமன்றம் கடும் கண்டனம்

0 2959

உத்தரவை மீறி வேலைநிறுத்தம் செய்ததற்காக மகாராஷ்டிராவில் பொதுப் பேருந்து ஊழியர் சங்கத்திற்கு அம்மாநில உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கில் சங்கத்தின் தலைவர் அஜய்குமார் குஜ்ஜாரை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தின் உத்தரவுகளை வேண்டுமென்றே மீறியதற்காக அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று என்றும் விளக்கம் கோரியுள்ளது.

மகாராஷ்டிராவில் போக்குவரத்துக்கழக ஊழியர்களை அரசு ஊழியர்களாகக் கருத வேண்டும் என்று கோரி கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பண்டிகை காலத்தில் வேலை நிறுத்தம் செய்ய மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments