தமிழகத்தில் நாளை 8-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்!

0 3075

தமிழகத்தில் நாளை 8-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற 7 சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் 1 கோடியே 51 லட்சத்து 13 ஆயிரத்து 382 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாளை 8-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சுமார் 50 ஆயிரம் முகாம்கள் மூலம் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. 2-வது தவணை ‘கோவேக்சின்’ தடுப்பூசி 13 லட்சம் பேருக்கும், ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி 48 லட்சம் பேருக்கும் செலுத்தப்பட உள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments