அடுத்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 10,000 மின்சாரவாகன சார்ஜிங் நிலையம் - இந்தியன் ஆயில்
அடுத்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் மின்சார வாகனங்கள் சார்ஜிங் நிலையங்களைத் திறக்க இருப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனமும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனமும் வரும் 2070ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு பூஜ்ஜியம் என்ற இலக்குக்கு உதவுவதற்காக சார்ஜிங் நிலையங்களைக் கட்டுவிக்கத் திட்டமிட்டுள்ளன.
இதன் எதிரொலியாக பிபிசிஎல் நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் அதன் 7,000 எரிபொருள் நிலையங்களில் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுததும் திட்டத்தை அறிவித்துள்ளது.
செப்டம்பரில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மூன்று ஆண்டுகளில் நாட்டில் 5,000 இடங்களில் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
Comments