எச்.ராஜா டுவிட்டர் பதிவுக்கு தனது பாணியில் எதிர்வினையாற்றிய நடிகர் சூர்யா

0 17518
எச்.ராஜா டுவிட்டர் பதிவுக்கு தனது பாணியில் எதிர்வினையாற்றிய நடிகர் சூர்யா

தன்னை விமர்சித்து பதிவிட்டிருந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் டுவிட்டர் பதிவுக்கு, நடிகர் சூர்யா லைக் போட்டிருப்பது தொடர்பான ஸ்கீரின் ஷாட், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அண்மையில் எச்.ராஜா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், மும்மொழிக் கல்விக் கொள்கை திட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நடிகர் சூர்யா தனது படத்தை மட்டும் ஐந்து மொழிகளில் வெளியிடுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், சூர்யாவை சுயநலமி எனவும் எச்.ராஜா விமர்சித்திருந்தார். இதற்கு, தனது பாணியில் எதிர்வினையாற்றிய நடிகர் சூர்யா, யாரும் எதிர்பாராத வகையில், எச்.ராஜாவின் டுவிட்டர் பதிவுக்கு லைக் போட்டுள்ளார்.

இதுதொடர்பான ஸ்க்ரீன் ஷாட், சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி, அப்ளாஸ்களை அள்ளிவருகிறது. நடிகர் சூர்யா நடிப்பில் ஜெய் பீம் திரைப்படம் அமேசான் ஒடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ளது..

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments