மின்னணுக் கழிவுகளால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய சிற்பம் ; பெர்காம்பூர் ஐடிஐ மாணவர்கள் சாதனை
ஒடிசாவின் பெர்காம்பூர் ஐடிஐ மாணவர்கள் மின்னணுக் கழிவுகளால் மிகப்பெரிய சிற்பத்தை உருவாக்கியுள்ளனர்.
பெர்காம்பூர் அரசு தொழிற்பயிற்சி மையத்தின் மாணவர்கள் கணினி, மின்னணுக் கருவிகள் ஆகியவற்றின் கழிவுகளைக் கொண்டு மிகப்பெரிய சிற்பத்தை உருவாக்கியுள்ளனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மின்னணுக் கழிவுகளை முறையாகக் கையாள்வது ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்தச் சிற்பத்தை உருவாக்கியதாகத் தெரிவித்துள்ளர்.
Comments