பெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரிக் குறைப்பால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.40 லட்சம் கோடி இழப்பு
பெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைத்துள்ளதால் மத்திய அரசுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
பெட்ரோல் மீதான உற்பத்தி வரியில் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான உற்பத்தி வரியில் லிட்டருக்கு 10 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது.
இதனால் நடப்பு நிதியாண்டின் எஞ்சிய ஐந்து மாதக் காலத்தில் மத்திய அரசுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாயும், ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயும் இழப்பு ஏற்படும் என்று பொருளியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை ஏற்கெனவே உள்ளதைவிட மேலும் பூச்சியம் புள்ளி மூன்று விழுக்காடு அதிகமாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Comments