மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நெல்லை மாவட்டத்தின் பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகள் முழு கொள்ளளவை நெருங்கி வருவதால், இரு அணைகளிலும் இருந்து மொத்தம் 1300 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதேபோல் கடனாநதி மற்றும் ராமநதி அணையில் இருந்து மொத்தம் 850 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், காட்டாற்று வெள்ளமும் சேர்ந்துள்ளதால் விநாடிக்கு சுமார் 3000 கன அடிக்கு மேல் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் செல்கிறது.
இதன் காரணமாக குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் மண்டபத்தை வெள்ளம் மூழ்கடித்து செல்கிறது.
Comments