உலகின் மிகப்பெரிய உடும்பு வகையைக் காக்க, காப்பகம் அமைத்துள்ளது இந்தோனேசிய அரசு
இந்தோனேசியாவின் சுரபாயாவில் உலகின் மிகப்பெரிய உடும்பு இனமான கொமொடோக்களைக் காக்கவும், இனப்பெருக்கம் செய்யவும் ஒரு காப்பகம் நடத்தப்பட்டு வருகிறது.
புவிவெப்பமாதலால் அடுத்த 45 ஆண்டுகளில் அரிய உயிரினமான மிகப்பெரிய உடும்புகளின் வாழிடங்களில் 30 விழுக்காடு இடங்கள் அழிந்துபோகும் அபாயம் உள்ளதாகப் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கான பன்னாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தோனேசியாவின் சுரபாயாவில் உள்ள உயிரியல் பூங்காவில் கொமொடோ உடும்புகளை வளர்த்து இனப்பெருக்கம் செய்து வருகின்றனர். இந்தக் காப்பகத்தில் 108 பெரிய உடும்புகளும், 35 இளம் உடும்புகளும் உள்ளன.
Comments