சூரிய குடும்பத்திற்கு அப்பால் உள்ள கோள்களை துல்லியமாக ஆராய தயாராகும் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்
சூரிய குடும்பத்திற்கு அப்பால் உள்ள கோள்களை கண்டறிய ஜேம்ஸ் வெப் ஸ்பெஸ் டெலஸ்கோப் என்ற தொலைநோக்கியை வரும் டிசம்பர் 18-ஆம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
சூரிய குடும்பத்திற்கு அப்பால் உள்ள கோள்களை கண்டறியவும், அதுகுறித்து துல்லியமாக ஆராயும் திறன் கொண்ட தொலைநோக்கியை நாசா,
ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கி வருகிறது.
விண்வெளியில் தொலைநோக்கியை செலுத்த முடிவு செய்துள்ள நாசா, அதன்மூலம் பிரபஞ்சத்தில் நட்சத்திர திரள்களை கண்டறிவது, பூமி போன்ற கிரகங்கள் உள்ளதா என தேடுவது மற்றும் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளை மிக துல்லியமாக செயல்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.
Comments