இஸ்ரேல் நாட்டு விமான எஞ்சின் பழுது, உயிர்த்தப்பிய 276 பயணிகள்

0 2547

இஸ்ரேல் நாட்டு விமானத்தில் கோளாறு ஏற்பட்டதையடுத்து கோவா கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள டாபோலிம் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

அதில் இருந்த 276 பயணிகளும் இதனால் உயிர்த்தப்பினர். அவர்களை மீட்க இந்தியக் கடற்படையினர் களமிறங்கினர். டெல் அவிவ் நகரில் இருந்து பாங்காக் சென்றுக் கொண்டிருந்த El Al Israel Airlines விமானத்தின் எஞ்சின்களில் ஒன்று நடுவானில் பழுதானதையடுத்து அந்த விமானத்தின் விமானி அவசரமாகத் தரையிறங்க அனுமதி கோரினார்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் விமானத்தைத் தரையிறக்க அனுமதித்த இந்திய கடற்படையினர், பயணிகளை பத்திரமாக இறக்கி அருகில் உள்ள ஓட்டலில் தங்க வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments