ஸ்காட்லாந்தில் கடலுக்குள் திடீரென ஏற்பட்ட பிரமாண்டமான நீர்ச்சுழல்!
ஸ்காட்லாந்தின் கடல் பகுதியில் திடீரென ஏற்பட்ட நீர்ச்சுழல் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. தெற்கு அயர்ஷையர் கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நீர்ச்சுழலை ஒருவர் தனது ட்ரோன் கேமரா மூலம் படம் பிடித்தார். அப்போது நீர்ச்சுழலில் இருந்து வெளியேறும் நீர் கடலின் அலைக்கு எதிர் திசையில் செல்வதைக் கண்டறிந்தார்.
இதுகுறித்த தகவலின் பெயரில் அங்கு வந்த நிலவியல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், அருகில் உள்ள குப்பைக் கிடங்கில் ஏற்கனவே இருந்த கழிவு நீருடன் மழை நீரும் கலந்ததால் இந்த நீர்ச்சுழல் உருவானது தெரியவந்தது.
Comments