பொள்ளாச்சியில் இப்படியும் ஒரு வேலை நடக்குதா ? பெண் அதிகாரி பகீர் புகார்...
லொகோண்டோ என்ற இணையதளத்தை பார்த்த வங்கிப் பெண் அதிகாரியின் கணவரிடம், மனைவியின் ஆபாசப் படம் இருப்பதாக மிரட்டிப் பணம் பறித்த, பொள்ளாச்சியைச் சேர்ந்த சிவில் என்ஜீனியரையும், கூட்டாளியையும் போலீசார் கைது செய்தனர்.
கரூரில் உள்ள ஒரு வங்கியில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வரும் பெண் அதிகாரி ஒருவர், மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது கணவரின் செல்போனுக்கு, அடையாளம் தெரியாத பெண்ணின் ஆபாசப் படம் அனுப்பிய மர்ம ஆசாமி ஒருவன், மனைவியின் ஆபாசப் படம் இருப்பதாக மிரட்டி அவரது 'கூகுள் பே' கணக்கில் இருந்து 49 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டதாகப் புகார் அளித்தார்.
பிளாக்மெயில் ஆசாமி பேசிய செல்போன் எண், பணம் எடுக்கப் பயன்படுத்திய வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைக் கொண்டு போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. வங்கிப் பெண் அதிகாரியின் கணவர் வீட்டில் தனிமையில் இருக்கும் நேரங்களில் லோகாண்டா என்ற இணைய தளத்தில் ஆபாச விளம்பரங்களைப் பார்த்து, அதில் கொடுக்கப்பட்ட செல்போனில் உள்ள பெண்களுக்கு தொடர்பு கொள்வதை வாடிக்கையாக செய்து வந்துள்ளார்.
அந்தவகையில் பெண் என நினைத்து தொடர்பு கொண்டபோது செல்போனில் பேசிய ஆசாமி . ஆபாசப் படம் ஒன்றை அவரது செல்போனுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி உள்ளான். அவருடைய செல்போன் எண்ணை வைத்தும், அவரிடம் இருந்து மிரட்டியும் தகவல்களைப் பெற்றதோடு, மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றை மார்பிங் மூலமாக மாற்றி தங்களிடம் ஆபாச படங்கள் இருப்பதாகக் கூறி மிரட்டிப் பணம் பறித்தது தெரியவந்தது. பணம் கேட்டு மிரட்டியதால், மனைவியிடம் மறைத்துக் கூறியதும் தெரியவந்தது.
செல்போன் நம்பரின் அடிப்படையில், பொள்ளாச்சியைச் சேர்ந்த கட்டிடப் பொறியாளரான பிரசாந்த் என்ற 27 வயது இளைஞரையும், அவருக்கு உதவியாக இருந்த அஜீத் குமார் என்கின்ற 49 வயது கொத்தனாரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இவரைப் போல பலரிடம் மிரட்டி பணம் பறித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பிளாக்மெயிலர்களிடம் இருந்து இருந்து 3 லட்சம் ரூபாய் ரொக்கம், இரு சக்கர வாகனம், பாஸ்போர்ட், 4 செல்போன்கள், லேப்டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Comments