டி-20 உலகக்கோப்பை "சூப்பர் 12" சுற்று, 16 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து

0 3910

டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் நியூசிலாந்து அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.

துபாயில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. 7 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகளை விளாசிய துவக்க வீரர் கப்டில் 56 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார்.

அடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தனர். 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 156 ரன்களை எடுத்த ஸ்காட்லாந்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments