ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவ நிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த சிறுமி உரை..!
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவ நிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் முன்னிலையில் தமிழகத்தைச் சேர்ந்த சிறுமி உரையாற்றினார்.
திருவண்ணாமலையை சேர்ந்த வினிஷா உமாசங்கர், சூரிய மின்சக்தியில் இயங்கும் இஸ்திரி வண்டியை உருவாக்கியவர். மேலும், இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தொடங்கிய எர்த்ஷாட் விருதுக்கான இறுதிப்போட்டிக்கு தேர்வானவர்களில் 14 வயதான வினிஷாவும் ஒருவர்.
இந்நிலையில், தூய்மை தொழில்நுட்பம் குறித்து பேச வினிஷாவுக்கு இளவரசர் வில்லியம்ஸ் அழைத்திருந்தார். இதனையடுத்து அங்கு பேசிய அவர், தலைவர்கள் பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் இறங்குங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.
Comments