பொதுப்பணித்துறை கோட்ட செயற்பொறியாளர் வீட்டில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினர் சோதனை ; 2 கோடியே 70 லட்ச ரூபாய் பணம் பறிமுதல்
பொதுப்பணித்துறை கோட்ட செயற்பொறியாளர் வீட்டில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் 2 கோடியே 70 லட்ச ரூபாய் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மண்டல தொழில்நுட்ப கல்வி பிரிவு கோட்ட செயற்பொறியாளராக பணியாற்றும் சோபனா ஒப்பந்ததாரர்களிடம் பணம் வசூலிப்பதாக லஞ்சஒழிப்பு துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை துருப்புசீட்டாக கொண்டு நேற்றிலிருந்து துவங்கிய சோதனையில் உரிய ஆவணங்களற்ற லட்சகணக்கான பணம் ரொக்கமாகவும், காசோலையாகவும் கைப்பற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஓசூர் நேருநகர் பகுதியில் அமைந்திருக்கும் அவரது சொந்த வீட்டில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கணக்கில் வராத 2 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 300 ரூபாய் பணம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி 38 சவரன் தங்க நகைகள்,11 வங்கிக் கணக்குகள், வங்கி லாக்கர் சாவி, ஒரு கிலோ 320 கிராம் வெள்ளி மற்றும் 13 சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை ஊழல்தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், வங்கி கணக்குகள் வங்கி லாக்கர்களில் உள்ள பணவிவரம் குறித்தான விசாரணையையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்
Comments