ரூ.45கோடி மோசடி, இந்தியன் வங்கி கிளை மேலாளர் உட்பட 18 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
சென்னை கோயம்பேடு இந்தியன் வங்கிக் கிளையில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டிருந்த சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் 45கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், வங்கி மேலாளர் உட்பட 18 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கை கையிலெடுத்த சிபிஐ, துறைமுக அதிகாரி போல் நடித்த கணேஷ் நடராஜன், தரகர் மணிமொழி, வங்கி மேலாளர் சேர்மதி ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது. அடுத்தடுத்து விசாரணையில், ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த இருவர் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் சிக்கினர்.
குறிப்பாக, துறைமுக பொறுப்பு கழகத்தின் 100 கோடி ரூபாய் பணத்தை வைப்பு நிதியாக டெபாசிட் செய்வதற்கு விடப்பட்ட டெண்டரில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக வட்டி தருவதாக கூறி இந்தியன் வங்கி கிளை மேலாளர் சேர்மதி ராஜா டெண்டரை பெற்றது தெரிய வந்துள்ளது.
உண்மையான வைப்புநிதி ஆவணங்களை துறைமுக கழக அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல், போலி ஆவணங்களை கொடுத்துவிட்டு, உண்மையான ஆவணங்களை வைத்து மோசடி கும்பல் பணத்தை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
Comments