ரஷ்ய அரச குடும்பத்தினரால் பயன்படுத்தப்பட்ட வைர ஆபரணங்கள் ஏலம்
1917ம் ஆண்டு ரஷ்யப் புரட்சியின் போது அந்நாட்டில் இருந்து கடத்தப்பட்ட அரிய வகை வைர ஆபரணங்கள் அடுத்த வாரம் சுவிட்சர்லாந்தில் ஏலத்தில் விற்பனைக்கு வர உள்ளன.
ஜெனிவா நகரில் நடைபெறும் இந்த ஏலத்தில் ரஷ்ய அரச குடும்பத்தைச் சேர்ந்த மரியா பாவ்லொவ்னா பயன்படுத்திய நீலக்கல் பதிக்கப்பட்ட வைரத் தோடுகள் 3 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஒரே அளவிலான இரண்டு 26 கேரட் வைரக் கற்களால் உருவாக்கப்பட்டத் தோடுகள் 40 கோடி ரூபாய்க்கும், 25 கேரட் வைர மோதிரம் ஒன்று 44 கோடி ரூபாய் வரையிலும் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments