ஆந்திராவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினத்திற்கு 200 கிலோ கஞ்சா கடத்தல்
ஆந்திராவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினத்திற்கு கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை தஞ்சாவூர் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம் நல்லியான் தோட்டம் பகுதியில் கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தஞ்சாவூர் சரக தனிப்படை போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார், அங்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மார்சல் டெரன்ஸ் ராஜா என்பவனை கைது செய்தனர்.
அவனிடம் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் கஞ்சாவை கடத்தி வந்து, நாகப்பட்டினத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
Comments