திருப்பூரில் தொடர்மழையால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டிடம் மண்ணில் புதைந்து விரிசல் - தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக புகார்...
திருப்பூரில் 84 கோடி ரூபாய் மதிப்பில் தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருவதாகக் கூறப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டிடம், கனமழை காரணமாக மண்ணில் புதைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் நான்காம் மண்டலத்திற்குட்பட்ட சின்ணான்டிபாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையமானது நீர்நிலை பகுதியில் கட்டப்பட்டு வருவதாக புகார்கள் உள்ள நிலையில், கடந்த வாரம் பெய்த கனமழையில் இந்தக் கட்டிடத்துக்குள் மழைநீர் புகுந்தது.
இந்த நிலையில் நேற்றிரவு பெய்த கனமழையில் கட்டிடத்தின் ஒரு பகுதி மண்ணுக்குள் புதையத் தொடங்கி இருக்கிறது. பல இடங்களில் விரிசல்களும் விழுந்துள்ளன. கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருவதாகக் கூறும் பொதுமக்கள், சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments