காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்கப்படும் - முதலமைச்சர்
தமிழ்நாட்டில் காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமைக் காவலர்கள் வரையிலான காவலர்கள் அனைவருக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக் காத்திடவும், தங்கள் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடவும் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் ஓய்வு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி, முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.
மேலும், காவல் பணியில் இடையறாது ஈடுபட்டு, சவாலான பணிகளை எதிர்கொள்ளும் காவலர்களுக்கு இந்த அறிவிப்பு, காவலர்கள் உற்சாகத்தோடு பணியினை மேற்கொள்ள வழிவகுக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Comments