வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதி மேற்கு வங்கத்தில் கைது
வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதியைத் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள், மேற்கு வங்கத்தில் கைது செய்துள்ளனர்.
ஜமாத் உல் முஜாகிதீன் பங்களாதேஷ் என்னும் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி மேற்கு வங்கத்தின் 24 பர்காணா மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள், பயங்கரவாதியைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவனுக்கு அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்புள்ளதாகவும், அவன் மேற்கு வங்கத்தில் பயங்கரவாத அமைப்பைக் கட்டமைக்கத் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஜூலை மாதத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேருடன் தொடர்புடையவன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு தாக்காவில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 22 பேரைக் கொன்ற வழக்கில், ஜமாத் உல் முஜாகிதீன் பங்களாதேஷ் இயக்கத்தின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
Comments