டெங்கு பாதிப்பு - மாநிலங்களுக்கு மத்திய அரசு உயர்நிலைக் குழு அனுப்பி வைப்பு!
நாட்டில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உயர்நிலைக் குழுவை அனுப்பி வைத்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆய்வு செய்ய உள்ள உயர்மட்ட குழுவினர், நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த உள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை டெங்கு தொடர்பாக ஆலோசனை நடத்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, டெங்கு பாதிப்பு உள்ள மாநிலங்களுக்கு நிபுணர்களை கொண்ட குழுவை அனுப்ப மத்திய சுகாதரத்துறை செயலாளருக்கு அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில், மருத்துவமனைகளில் காலியாக உள்ள கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகளை, மாநில அரசுகள் டெங்குவால் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சைக்கு ஒதுக்கிட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
Comments