ஹவாலா மூலம் பணம் மோசடி - குற்றவாளிக்கு 7ஆண்டு சிறை...

0 2069

போலி ஆவணங்கள் மூலம் ஹவாலா பணம் சுமார் 18 கோடியே 66 லட்சம் ரூபாயை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் லியாகத் அலி என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

சென்னை அங்கப்பன்நாயக்கன் தெருவைச் சேர்ந்த லியாகத் அலி என்பவர் கடந்த 2016ம் ஆண்டு துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பல கோடி மதிப்புள்ள மின்னணு சாதனங்களை சரக்கு விமானங்களிலும், கப்பல்கள் மூலமாகவும் இறக்குமதி செய்ததாக போலி ஆவணங்கள் தயாரித்துள்ளார்.

பின்னர் இதன் மூலம் கணக்கில் வராத ஹவாலா பணம் சுமார் 18 கோடியே 66 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை வெளி நாடுகளுக்கு கடத்தியது தெரிய வந்தது.இதுதொடர்பாக  சென்னை மண்டல மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி லியாகத் அலியை கைது செய்தது. 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments