தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் மீண்டும் பள்ளம்..! 3 முறை பள்ளம் விழுந்த நிலையில் 4வது முறையாக பள்ளம்

0 6692

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில், தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் நான்காவது முறையாக பள்ளம் விழுந்துள்ளது.

திருநெல்வேலி-தூத்துக்குடி இடையிலான நெடுஞ்சாலையில், 2012 ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட 2 பாலங்களில், 2017 ஆம் ஆண்டு ஒரு பகுதியில் திடீரென விரிசல் ஏற்பட்டது.

image

அதனைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு மற்றும் நடப்பாண்டு மார்ச் மாதம் மீண்டும் பாலத்தில் பள்ளம் விழுந்ததை அடுத்து ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது.

image

இந்நிலையில், போக்குவரத்து நடைபெற்று வந்த பாலத்தில் மீண்டும் பள்ளம் விழுந்துள்ளது. உடனடியாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்தப் பாதையை தடுப்பு வைத்து அடைத்தனர். ஏற்கனவே பள்ளம் விழுந்த சீரமைக்காத பாலத்தில் இருவழிப் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments