8 பேரின் உயிரை பலி வாங்கிய பட்டாசுக் கடை தீ விபத்து ; பட்டாசுக் கடை உரிமையாளர் கைது

0 5454
8 பேரின் உயிரை பலி வாங்கிய பட்டாசுக் கடை தீ விபத்து

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தீ விபத்துக்குள்ளாகி 8 பேரின் உயிரை பலி வாங்கிய பட்டாசுக் கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செல்வகணபதி என்ற அந்த நபர் நடத்தி வந்த பட்டாசுக் கடையில், கடந்த மாதம் 26ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பெரும் பொருட்சேதமும் ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பட்டாசுக் கடையின் உரிமையாளர் செல்வகணபதியை 5 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்துள்ளனர்.

அரசு அனுமதித்த அளவை விட கூடுதலாக வெடிமருந்து பட்டாசுகளை வைத்திருந்தது உள்ளிட்ட பிணையில் வெளிவர முடியாத வகையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments