பணமோசடி வழக்கில் மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் கைது..!
பண மோசடி வழக்கில் கைதான மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை வரும் 6ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக், மாதந்தோறும் 100 கோடி ரூபாய் மாமூலாக வசூலித்துத் தரும்படி கட்டாயப்படுத்துவதாக மும்பை முன்னாள் காவல் ஆணையர் பரம்வீர் சிங் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதையடுத்து அனில் தேஷ்முக்கிடம் சிபிஐ, அமலாக்கத்துறையினர் விசாரித்த நிலையில், மதுபான விடுதி உரிமையாளர்களிடம் சட்டவிரோதமாக சுமார் 4 கோடி ரூபாயை அவர் வசூலித்ததாகவும், அதனை போலி நிறுவனங்கள் பெயரில் பணப் பரிமாற்றம் செய்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் திங்கட்கிழமை அனில் தேஷ்முக்கிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தியபின் கைது செய்தனர்.
Comments