தொழிலதிபரைக் கடத்தி மிரட்டி சொத்துகளை எழுதி வாங்கிய வழக்கில் தொடர்புடைய உதவி ஆணையர் உட்பட 6 போலீசார் சஸ்பெண்ட்

0 3099

சென்னையில் தொழிலபதிரைக் கடத்தி சொத்துகளை எழுதி வாங்கிய வழக்கில் தொடர்புடைய காவல் உதவி ஆணையர் உட்பட 6 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

கடந்து 2019-ஆம் ஆண்டு அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ராஜேஷ் என்பவரை கடத்திச் சென்று மிரட்டி, அவரது சொத்துகளை எழுதி வாங்கியதாக திருமங்கலம் சரக உதவி ஆணையராக இருந்த சிவக்குமார் உட்பட காவல்துறையைச் சேர்ந்த 6 பேர், இந்து மகா சபா அமைப்பின் நிர்வாகி ஸ்ரீகண்டன் உட்பட 4 பேர் என மொத்தம் 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் ஸ்ரீகண்டன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற 9 பேரும் தலைமறைவாக உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments