பருவமழையை எதிர்கொள்ள கட்டுபாட்டு மையம் தயார் ; சென்னை மாநகராட்சி
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அதனை எதிர்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சி பல்வேறு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 30 இடங்களில் மழை அளவை கண்காணிக்கும் சென்சார் கருவிகளும், ஏரிகள் உள்ளிட்ட இடங்களில் வெள்ள அளவை கண்காணிக்கும் சென்சார் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், அவை அனுப்பும் தகவல்கள் கட்டுப்பாடு மையம் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கபடுவதாகவும் மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், மழையால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் புகாரளிக்க மாநகராட்சி தரப்பில் புகார் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Comments