தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த டி.எஸ்.பி ஜெயராமின் திண்டுக்கல் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சின்னாளபட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயராம், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்தார். தற்பொழுது தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் ஜெயராம், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில், திண்டுக்கல் அசோக்நகரிலுள்ள ஜெயராம் வீட்டில் டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையிலான 10 பேர் காலை முதலே சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Comments