காஷ்மீரில் மீண்டும் வீட்டுக்காவலில் மெகபூபா முப்தி!
காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முப்தி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக அவரது கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சோபியான் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆனந்த்நாக்கைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் இளைஞரின் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல்கூற மெகபூபா முப்தி திட்டமிட்டிருந்த நிலையில் அவரது வீட்டின் பிரதான வாயில் கதவு பூட்டப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
Comments