திருச்செங்கோடில் நிலசீர்திருத்தம் செய்ய 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்!

0 2981

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடில் நிலசீர்திருத்தம் செய்ய 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

எலச்சிபாளையத்தை சேர்ந்த ஒருவர், தன் நில சீர்த்திருத்தத்திற்காக வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனை அணுகியதாகவும், அதற்கு பரமேஸ்வரன் 5 ஆயிரம் ரூபாய் கையூட்டு கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்த நபர், போலீசார் கொடுத்த ரூபாய் நோட்டுகளை வழங்கியதாக கூறப்படுகிறது. ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை பெற்ற பரமேஸ்வரனை மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.  

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments