பண மோசடி வழக்கில் மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை கைது செய்த அமலாக்கத்துறையினர்!
பண மோசடி வழக்கில் மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவர் தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த அனில் தேஷ்முக்.
இவர் மாதந்தோறும் 100 கோடி ரூபாய் மாமூலாக வசூலித்துத் தரும்படி கட்டாயப்படுத்துவதாக மும்பை மாநகர முன்னாள் காவல் ஆணையர் பரம்வீர் சிங், முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து தனது பதவியை அனில் தேஷ்முக் ராஜினாமா செய்தார்.
இந்தவழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரித்து வந்த நிலையில், மும்பை மதுபான விடுதி உரிமையாளர்களிடம் சட்டவிரோதமாக 4 கோடியே 70 லட்சம் ரூபாயை அனில் தேஷ்முக் வசூலித்ததாகவும், அதனை, போலி நிறுவனங்கள் பெயரில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Comments